இயற்கை: கபிலர் பாரியைப் பாடியவை

வேள்பாரி

வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் [17]
எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான் [18]
பாரியின் வள்ளணமைக்கு இணை மழை மட்டுமே.[19]
பரிசிலாகக் கேட்டால் தன்னையே கொடுத்துவிடுவான்.[20]
பெரும் யானைப் படையுடன் நாட்டைக் கைப்பற வந்திருக்கும் வேந்தர் விறலியர் போல ஆடிப் பாடிக்கொண்டு வந்தால் பெற்றுக்கொள்ளலாமே.[21]
பறம்பு நாட்டு 300 ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். அப்படியிருக்க மூவேந்தர்கள் இதனை எதற்காக முற்றுகை இட்டுள்ளனர்? [22]
பறம்பு நாட்டை வேலால் வெல்ல இயலாது. கிணையுடன் பாடிவந்தால் பெற்றுக்கொள்ளலாம் [23]