
அவள் அவளாகவே இருக்கட்டும்.
அவளையேன் அந்தயிந்தவென
அர்த்தமற்ற உளறல்களால்
அலங்கரிப்பதேன்???
அவள் அவளாகவே இருக்கட்டும்.
பார்வையிலே பலவற்றை உணர்த்துமிந்த
பாவப்பட்ட சமூகத்தில்
பழிச்சொல்லுக்கு பலியாவது அவளே.
அவள் அவளாகவே இருக்கட்டும்.
அம்மா அன்னை அனைத்துமவளே – என
ஆண்டாண்டாய் அலறுகிறீர் ஒரு நாளில்
இதுவே இவளுக்கு போதுமென்ற நினைப்புடன்.
அவள் அவளாகவே இருக்கட்டும்
அவளாடைக்கும் அவளுணவிற்கும் அளவுகளுரைத்து
அன்பானவர்களே……. போதும்.
அவள் அவளாகவே இருக்கட்டுமே!!!
– அ.ஜெ. அமலா