
வாழ்க்கை..
உலகின் மிகப்பழைய
ஒத்திகையற்ற
மிக நீண்ட நாடகம்.
காதல்
இரவின் நீலத்தை ரசிக்கவும்
அதன் நீளத்தை வெறுக்கவும்
ஒரு சேர
கற்றுத்தரும்
மாயப்பிறழ்ச்சி…
செருப்பு
இணையைப் பிரிந்தால்
மதிப்பற்றுப்போகும்
மனிதர்களைப்
போன்றே…
செங்கல்
சுட்டாலும் மின்னுவது
பொன் மட்டுமல்ல
மண்ணும் தான்
மணல்
நீரின் பாதங்களை
அறிந்திடும்
பாக்கியம்
பெற்றவை..
– எபிநேசர் ஈசாக்