தேர்தலும் அரசு ஊழியர்களும்

தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இருந்தே அரசு ஊழியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இந்த தேர்தலை நடத்துகின்றனர். எந்த வசதிகளும் இல்லாத ஊர்களுக்கெல்லாம் எப்படி பயணிக்கின்றனர். உணவு தண்ணீர்,

கழிப்பிட வசதி இல்லாமல் எத்துனை சிரம்ப்பட்டு கடமையாற்றுகின்றனர் என்று நிறைய கட்டுரைகள் சுற்றலில் வர ஆரம்பித்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே அரசு ஊழியர்கள் செய்வது அப்பழுக்கற்ற சேவை, தன்னலமற்ற கடமை உணர்ச்சி, அவர்கள் செய்வது எல்லாமே திறமை, செயல்திறனின் உச்சபட்ச அளவு என்று நம்ப வைத்தே வந்துள்ளனர். அந்த ஐயாக்கள், மேடம்கள் சொல்வதைக் கேள்வியே கேட்காமல், ஐயமுறாமல் அப்படியே ஏற்றுக்கொள்வது மட்டுமே பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டது.