
கயல்விழிகள் இல்லை
கார்குழலும் இல்லை
கொழுசொலியும் இல்லை
இன்னார் மகள், மனைவி, தாய்
இது இனி முகவரி இல்லை
தாங்கும் அன்னைபூமி இல்லை
ஓடும் நதிமகளும் இல்லை
பொழியும் வானத்தாயும் இல்லை
எது உங்கள் மேன்மை? எதுவும் இல்லை
கொண்டாட வேண்டியவர்கள் இல்லை
வணங்கத்தக்கவர்களும் இல்லை
சாது பெண்களும் இல்லை
சக உயிர்கள் ஆவோம்
மகுடங்கள் வேண்டாம்
மரியாதை போதும்..
– தி.சங்கீதா