
வானமே எல்லை
எங்கும் பற
சிறகு கொண்டு
வானிற்கு வண்ணம் தீட்டு
மனிதம் நேசி
வையத்தின் மீது காதல்கொள்
வீழும்போது சோர்ந்து போகாதே
கூண்டுகளை உடை
ரௌத்திரம் பழகு
சுதந்திரத்தை சுவாசி
கற்க மறவாதே
காகிதமும் ஆயுதம் ஆகலாம்
வேட்டைக்கு பழகு
சிறகை விரி
பற
வான் வசப்படும்.
– மணிகண்டன் முருகன்