பெண்

Image courtesy: pexels.com

வாழ்வை எளிமையும், புதுமையுமாக்க
துள்ளும் வான்மீன்களின்
இருப்பு நிலைகளை
வரையறைக்குள் அடக்குதல் ஆகாது.

சடப்பொருட்களின் பரிணாம மையில்
மானுடத்தைப் புனைந்து,
இருத்தலின் இறுதிச்சொட்டு
வரை ஓயாத பெண்ணினம்
எத்தோடுமே சமனிலி.

இங்கு முடிவென்பதென்னவோ
சுடரிலோ, மண்ணிலோ
எதற்கு செங்கோண மலைகள்
சமபக்கம் ஆக்குவோம்.

பட்டாம்பூச்சிகள் பறத்தலின் மகிழ்ச்சி அதற்கு மட்டும் ஆனதன்று.


– நவீன்.ஜெ