அபத்தமானவன் நான்…..

இறுக்கி நெறுக்கி கட்டப்பட்டு சாத்தும் பூக்களில் மகிழும் கடவுளிடம் தான் நான் இன்றுவரை எனக்கான கருணையை பற்றி கேட்டுகொண்டு இருக்கின்றேன்

பிஷ் டேங்கில் மீன் வளர்ப்பவனிடம் சுதந்திரத்தை பற்றி தீவிரமாக பிரசங்கம் செய்துகொண்டு இருக்கின்றேன் 

தள்ளுவண்டி கடைகளில் பேரம் பேசிவிட்டு இதை விட கூடுதல் விலையில் வேறு மாடல் இருக்கிறதா என்று கேட்கும் நகரத்துவாசியின் மனநிலை எனக்கு

இந்த நிகழ்வுகளை அபத்தமென யாரேனும் கூறும் முன்

இன்றே நான் இந்த வரிகளை எழுதி என்னை புனிதப் படுத்திக் கொள்ள தயாராகிவிட்டேன் 

என்னை அபத்தமானவன் என யாரும் கூற நினைக்காதீர்கள்.

படைப்பாளர் : கவிஞர்.மணிவண்ணன்.மா