ஏன் பிறந்தார்

குயில்கள் அழுதாலும் 
ரசிக்கும் ரசிகர்கள்
மயில்களின் பீலியை
அழகுப் பொருளாக்கும்
ரசிகர்கள்
மான் கொம்புகளை
வெற்றிச் சின்னமாய் 
அலங்கரிக்கும் ரசிகர்கள்
ஓவியப் பெண்களுக்கு மட்டுமே 
மரியாதை தரும் ரசிகர்கள்
உள்ள நாட்டில்
ஏன் பிறந்தார் காமராஜர்?

படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்