ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்….??

வணக்கம் பறம்பு உறவுகளே…

பறம்பு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ( 04.07.21 ) மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு உணவு எடுத்துச் செல்லும் இரண்டு வண்டிகள்( food trolley ) ரூ.1,10,000.00 செலவில் வழங்கப்பட்டது.

கொரனோ இரண்டாம் அலையில் பலரும் வாழ்வாதாரம் இழந்தார்கள். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எளிய மக்களுக்கு உதவினர். முதல் அலையின் போது பறம்பு தமிழ்ச் சங்கத்தின் மூலம் (₹ 75,000)பல தொண்டு நிறுவனங்கள் வழியாக உதவினோம்.

இம்முறையும் பறம்பு தமிழ்ச் சங்கம் தமது உறுப்பினர்கள் வாயிலாக உதவிக்கரம் நீட்ட முனைந்தது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தகுதிவாய்ந்த 7 தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு 70 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதம் 1 லட்சம் பறம்பு தமிழ்ச் சங்கத்தின் கௌரவத் தலைவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், நம் ஆசானுமான திரு.சு்.வெங்கடேசன் அவர்களிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அவரின் வழிகாட்டலின்படி மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு உதவிட முனைந்தோம். நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்ல வசதியாக உணவு எடுத்துச் செல்லும் வண்டிகள் வேண்டுமென மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுத்தார்கள். அதனடிப்படையில் நேற்று காலை 10.30 மணி அளவில் பறம்பு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு திருப்பதி வாசகன் மற்றும் செயலாளர் திருமதி அங்கையற்கண்ணி அவர்கள் மற்றும் பறம்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் திரு அருள்குமரன், திரு தங்கராஜ், திரு பழனிச்சாமி, திரு தங்கப்பாண்டி, திரு தேவ் ஆனந்த், திரு அருண் முன்னிலையில் மருத்துவமனை ஆர்.எம்.ஓ திரு.காந்திமதிநாதன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

உணவு எடுத்துச் செல்லும் வண்டி (food trolley)
தோப்பூர் நெஞ்சக மருத்துவமனை ஆர்.எம்.ஓ திரு காந்திமதிநாதன் அவர்களுடன் பறம்பு தமிழ்ச் சங்கம்

இந்த நெகிழ்வான தருணத்தில் பெரியகுளம் நகர வளர்ச்சிக்குழு தலைவரான வழக்கறிஞர் திரு மணி கார்த்திக் அவர்களும், பெரியகுளம் நகர்நலமன்ற தலைவரும், மூத்த பத்திரிக்கையாளருமான திரு அன்புக்கரசன் ஐயா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தது பெரும் மகிழ்வு. இந்த நெகிழ்வான, மன நிறைவையளித்த பேரன்பு நிகழ்வை ஏற்படுத்தித் தந்த ஆசான் திரு.சு.வெங்கடேசன், நன்கொடையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

பவவருடங்களுக்கு முன்பாக அரசாலும், பொதுச்சமூகத்தாலும் கைவிடப்பட்ட, காட்டாஸ்பத்திரி என்று சாமான்யர்களால் ஒரு வித அச்சத்தோடு உச்சரிக்கப்பட்ட தோப்பூர் மருத்துவமனையை தன் சீரிய முயற்சியாலும், தன்னலமற்ற சேவை குணத்தாலும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மனைகளை விஞ்சும் உள்கட்டமைப்பு வசதிகளோடும், அன்பு ததும்பும் மருத்துவ இல்லமாகவும் மாற்றிக் காட்டிய மருத்துவர் காந்திமதி நாதன் அவர்களையும், அவருக்கு எப்போதும் உறுதுணையாக நிற்கும் நம் ஆசான் சு.வெ அவர்களையும் பறம்பு தமிழ்ச் சங்கம் இருகரம் கூப்பி வணங்குகிறது.

உணவு எடுத்துச் செல்லும் வாகனத்துடன் பறம்பு தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

பறம்பு தமிழ்ச் சங்கம் உறுப்பினர்களாலும், வேள்பாரி வாசர்களாலும் உள்ளன்போடு வழங்கப்பட்ட நிதியை பெற்று அதை முறையாக, ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு வழங்கிய….
காக்கை அறக்கட்டளை, PSR Trust, ழகரம் பவுண்டேசன், AIM Trust, Foodo Trust, Dyfi – Cumbum, எழுத்தாளர் பிரபு தர்மராஜ் ஆகியோரை பறம்பு தமிழ்ச்சங்கம் நன்றியோடு நினைவு கூர்ந்து பாராட்டுகிறது.

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்….??

மேற்கண்ட நிகழ்வுகள் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே…. உலகெங்கும் விரிந்துள்ள வேள்பாரி வாசகர்கள் சத்தமில்லாமல் இன்னும் பல சாதனைகளை, உதவிகளை பிரதிபலன் பாராது செய்து கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்க தமிழ்….
வளர்க பாரி குணம்….
உலகெங்கும் பரவட்டும் ஆசான் சு.வெங்கடேசன் அவர்களின் புகழ்.

இந்நிகழ்வை தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த ஆசான் திரு. சு.வெங்கடேசன் எம்.பி அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
பறம்பு தமிழ்ச் சங்கம்