காதல்

எப்பொழுதாவது

பூக்கும்

குறிஞ்சிப்பூ போல

பூத்துக் கிடக்கும்

பிரியத்துக்காகவே…

இத்தனை நாளும்

நானும் அவனும்

முறைத்துக் கொண்டோம்

மணம் வீசும்

தருணம் மட்டும்

போதுமாம் ..

ஒவ்வொரு நாளும்

பூத்துக் கிடக்க…

இதற்கு பெயர்தான்

காதலோ…

படைப்பாளர் : ச சிவகாமி

புகைப்படம் : Teona Swift

நன்றி : Pexels