கொடுந்தீயே

(கும்பகோணம் தீவிபத்து

நினைவஞ்சலி )

ஜனித்த   மலர்களை

எரித்த    கனலே…

பனித்த  கண்ணீர் துளி

கனத்த பாறையாய்…

நிலைத்த நினைவாய்

நீடிக்க செய்தாய்…

குணத்தை மாற்றி

குற்றம் புரிந்தாய்.

அகலில் ஒளியாய்…

அடுப்பில் தீயாய்…

வாழ்வதை ஒழித்தாய்.

வலை அளித்தாய்.

தீபாவளி கொண்டாட்டமாய்…..

கார்த்திகை தீப்பொறிகளாய்….

ஒளிர்வதை இரசித்தவர்களை…

அகோரமாய் தோன்றி

ஆர்ப்பரித்த செயலால்

அகால(அகலா) மரணங்கள் 94……

அஃதே முடிவுனக்கு.

இடமில்லை ஐம்பூதத்தில்

இனி உனக்கு….

மன்னிக்க மனமில்லையெனக்கு.

மழையென அழுதேன்..

வற்றியது கண்ணீர்…

மீண்டும் அழவேண்டும்…

மீண்டாலும் அழத்தூண்டும்…

என் தோட்டத்து கொடி மல்லிகை மலர்களே..

என் தோட்டத்து மரத்தின்

மாங்கனிகளே..

உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

படைப்பாளர் : அருணாகுமாரி

நன்றி : pexels – valeria – boltneva