சமரசம்

கையூட்டு பெற்றவனை
கையும் களவுமாக பிடிக்கும் போது – சிறிது
கையூட்டை பெற்று சமரசம் அடைகிறான்.

தரமற்ற பொருளை  முதல் ஆளாய்
எதிர்த்தவன் தரமான தங்கத்தை
பெற்றவுடன் சமரசம் அடைகிறான்.

அலுவலக பணியில் பொறுப்பாய்
அலைந்தவன் அது பறிபோகும் இடத்தில்
பதவிக்காக சமரசம் அடைகிறான்.

ஏழை குழந்தைக்கு பால் இல்லை 
என்பவன் தன் பிள்ளை பசியாறியவுடன்
பால் பற்றாக்குறை இல்லை என்று
சமரசம் அடைகிறான்.

சுயநலம் என்பது சமரசமோ 
இல்லை பொது நலத்திலும் சுய
நலம் வேண்டும் என்பதும் சமரசமோ.

சமதர்மமும் சமரசமும் ஒரு தாய்
பிள்ளைகள் போல இரண்டிலும்
சம வார்த்தை உள்ளதே.

  • கலந்தர்சேக்