சார்பு

உவனித்த மணற்திரளில்

நடந்து கொண்டிருக்கிறோம்

உணர்ச்சியின் அடைப்பான்

திருகித் திறக்கிறது.


பேசுகிறாய்

கடற்காற்று பிசுபிசுக்கிறது

சிரிக்கிறாய்

இயந்திரப்படகு கரைசேருகிறது


நனைந்த காலில் மணல் ஒட்டுவதும்

அலை அதைத் துடைத்துப் போவதுமாய்

நீள்கின்ற பாதையில் நீலம் கருமையாகி

தற்காலிகப் பிரிவு சூழ்கையில்

நண்டு வலை விட்டு 

பிடியைத் தளர்த்த மறுக்கிறது.


இக்குவலயத்தில் கரை மட்டும்

இல்லையென்றால்

கடல் எங்கு போகும்.


– நவீன்.ஜெ