பழ.சா கவிதைகள்

இடுகாடு இளித்தது

—————————-

மவனே,

எங்கு வேண்டுமானாலும்

எவ்வளவு வேண்டுமானாலும்

மண்ணாய் வாங்கு…

இறுதியில்

உன் வாய்க்கு போடுவது

என்னிடத்து மண்ணே என்று

இடுகாடு இளித்தது.

************

எதிர்பார்த்தல்

——————–

உன்

எதிர்பார்த்த லெதுவோ…?

அதுவேதான்

பிறர்க்கும்…

அதற்காக நீஎன்ன செய்தாய்…?

என்றுனை நீயே

கேட்டுப்பார்… பின்

அறியும் நீ

செய்தது சரியாவென…

திருந்து அல்லாது

திருத்திக்கொள்…!

************

விதை

———

“விதை நான் போட்டது”

என்றுரைப்பதை விடுத்து

என்ன விதையென்பதை கூறு…

நல்விதையெனில் நல்லதே அமையும்,

கெடுவிதையெனில் கேடே விளையும்…

வாழ்வும் அப்படியே…

நாம் என்ன கொடுக்கிறோமோ

அதுவே நமக்கும் கிடைக்கும்…

************

படைப்பாளர் : பழ.சா

புகைப்படங்கள் : காந்தி சங்கர்