
அங்கத்திலென்ன
வேற்றுமை
கண்டீர்??

அகத்தினிலேன்
வேறினத்தவனாய்
காண்கிறீர்??
யார் நின்னை
பகைத்து
பட்டயம் உயர்த்தினர்?
ஏன் அவர்களை
பிரித்து
ஒதுங்கி வாழ்கின்றீர்??
இனப்பெருக்க
உறுப்பைச்சுற்றி
முள்வேலி அமைப்பது எதற்கு??

மனம் புணர்ந்தபின்
மணத்திற்கு தடை எதற்கு??
தீபம் முன் அமரும்
சாமிக்கும்
சாதிக்கொன்றாக கோயில்!!
தீயால் கருகும்
பிரேதத்திற்கும்
சாதிக்கொன்றாக சுடுகாடு!!
மூதாதையரின் குணம்
பிள்ளைகளிடம்
இடம்பெயருமோ??
ஒருதாய் பிள்ளையென்பதை
மறப்பது தகுமோ??
சூழ்ந்திருப்பவர்களை பொறுத்தே குணநலன்
அமையுமென்பதை
அகிலம் என்று
அறியுமோ??
*****
படைப்பாளர் : M ANBU
புகைப்படங்கள் :
MUTAZA SAIFEE
DIVAKARAN S AND MEGAPIXELSTOCK