





கொரானா ஊரடங்கு காலத்தில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்த சின்ன தேவதைகள். காலையில் கதவைத் திறக்கச் சொல்லி வாசலில் கத்துவது, பசித்தால் காலைச் சுற்றி வந்து செல்ல கடி கடிப்பது, உடைகளை இழுத்து விளையாடுவது, அமைதியாக மடியில் வந்து படுத்துக் கொள்வது, அலுவலக வேலை செய்ய விடாமல் மடிக்கணினியின் மீது நிற்பது, முன்னங்காலை என் முகத்தில் வைத்து கவனம் திருப்புவது, பூனைக்குட்டிகளை வீட்டில் சேர்க்காதே என்று சொல்லும் அம்மாவுடன் கைப்பேசியில் உரையாடும் போதெல்லாம் காதருகில் வந்து கத்தி திட்டு வாங்கி கொடுப்பது, படுக்கை விரித்தால் ஓடி வந்து அதை கலைத்துப் போடுவது என என் தற்போதைய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அழகான ராட்சசிகள்…!
படம்: ஜீவிதா வேம்படிமுத்து