முரண்கள்

முப்பது நாள் கர்ப்பத்தில்
இந்தமுறையும் குறைபிரசவமாகவே பிறந்திருக்கிறது …
ஊதியம்


சாளரத்தின் வழியாக
எட்டிப்பார்க்கிறேன்
உலகம் கம்பிகளுக்குள்
கிடக்கிறது
அதைக்காப்பாற்ற
கதவு திறக்கப்படவேண்டும்
அதை நான் உள்ளே
தாழிட்டிருக்கிறேன்
காற்று தட்டிக்கொண்டே இருக்கிறது


அழுக்கு பாத்திரங்களை தேய்த்துக்கொண்டே அலுத்துக்கொள்கிறாள் அம்மா வீணாக்கப்பட்ட காய்கறிக்கும் ஒதுக்கப்பட்ட மிளகுக்கும்


அடிக்கடி தன்னை நிலைநாட்டிக்கொள்ளவே கடவுள் பிச்சைக்காரர்களை படைத்திருக்கவேண்டும்


அம்மாவின் அடிவயிற்றுக்கோடுகளில் அறிகிறேன் இவ்வுலகம் அன்பு சூழ்ந்ததென்று


திரௌபதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நடப்பவை யாவும் கண்ணன் அறிந்ததேயென்று


தீயிலிறங்கியது சீதை
வணங்கப்படுவது ராமன்
முரண்


கர்த்தரும் வலதுசாரிதான் போல இடதுகள்ளனை கள்வனாக்கிவிட்டார்


புத்தனுக்கு தெரியும் யசோதா திறமைசாலியென்று பாவம் அவளுக்குதான் தெரிந்திருக்கவில்லை புத்தன் ஏமாற்றுக்காரனென்று


எபிநேசர் ஈசாக்….