A.பழனிசாமி கவிதைகள்

மரணம் 

மரணம் உன்னுள்ளே தான் உள்ளது.
அது உன்னை தழுவுவதும் உன் கையில் தான் உள்ளது.
தகாத உணவு, தகாத உறவு
கூடா நட்பு, கூடா நடப்பு
அதீத கோபம், அதீத பாவம்
வேண்டா பயம், வேண்டா பாடம்
இவையனைத்தும் துறந்தால் மரணம் உனைத்தழுவ நாள் கேட்கும்,
அதுவன்றி நீயிருந்தால் மரணம் உனக்கு நாள் குறிக்கும்.

இடுகாடு இளித்தது 

மவனே,
எங்கு வேண்டுமானாலும்
எவ்வளவு வேண்டுமானாலும்
மண்ணாய் வாங்கு…
இறுதியில்
உன் வாய்க்கு போடுவது
என்னிடத்து மண்ணே என்று
இடுகாடு இளித்தது.

கலியுக காதல் 

செல்ல(ம்)மா
இடை பிடித்து
உச்சி முகர்ந்து
கண்கள் பகிர்ந்து
முத்தம் பதித்து
காமம் தவிர்த்து
விட்டுக்கொடுத்து
காதல் கொண்ட
காலம் போனது…

கலி முத்தி…

நவீன காதலோ
செல்லிடையில்
காதல் மலர்ந்து
மோகம் படர்ந்து
காமம் பகிர்ந்து
விடாமல் கெடுத்து
காணாமலே போனது
கடந்த காலத்து
மெல்லிய காதல்…

காதலித்து
உயிர் துறந்தோர் அன்று…
காதலித்தே
உயிர் எடுப்போர் இன்று..

மனநிறைவு

இறப்பின் மாலையிட்டு
கொடுக்கும் மதிப்பைவிட
இருக்கும்போதே…
வயோதிகத்திற்கு மண்டியிட்டு,
மனமுவந்து அன்னமிட்டு
அவர்களின் மனம் நிறைந்த
மதிப்பைப் பெறுவதே
நமக்கான மனநிறைவு…!

அறிவு

பகுத்தறிவோ,
பண்ணறிவோ,
மனிதனையும் – அவன்
மிதிக்கும்
மண்ணையும் – புரிந்து
மதிக்கும்
மதியறிவே
மாந்தரறிவு.

வலி(ழி)

வலியது வலியெனில்
அவ்வலி போக
வழியது எதுவென
வலிந்து கூறார்
யாரோ…?

குடித்தனம்

குடியெனக்கு தனமுனக்கு
குடித்தனம் எனக்கெதற்கு…?
என் குடியோ தட்டைநக்க…
தமிழ்க்குடியோ தாளைநக்க…
சுடுகுடியில் தகதகக்க…
போடுமெனக்கு டண்டனக்கா…

பெற்றது

விந்தை
உயிராக்கி – உயிரை
உருவாக்கி – உருவை
உறவாக்கி – உறவை
உலகிற்கு
உணர்த்திய
உன்னையும்…
உலகையே – அந்த
உறவிற்கு
உணர்த்திய
என்னையும்…
வீதியில்
விட்டதென்ன
விதியோ…

மனம்

மனம்
சிலரால்
பண்பட்டது
பலரால்
புண்பட்டது
சிலரை பலராக்குவதும்
பலரை சிலராக்குவதும்
என்னுள்ளே உள்ளது.

மக்களின் மைண்ட் வாய்ஸ்

செவ்வாய்க்கு கோளனுப்பி வாழ வழி
உண்டாவென சோதித்திட
வெறுவாய் மக்களது வருவாயில் கையிட்டு
அவர்தம் வாழ்வுதனைச் சிதைத்தான்.
ஆராயவென்றழித்த தாள்கொண்டு
கொஞ்சமேனும் தமிழகத்திற்களித்திருந்தால்
ஆறுகள் இணைந்திருக்கும் – உழவன்
நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்!
நாமும், நம் நாடும் செழித்திருப்போம்!
நம் மக்கள் வளம்பெற்றிருப்பர்!
அண்டையாரிடம் நீர்ப்பிச்சை தேவையில்லை
மண்டையிடும் உயிர்ஒச்சம் உழவனுக்கில்லை…

நற்பெயர்

பெயர் கெடாதிருக்க முயல்வதை விட
பெயர் கெடினும் சாரமில்லையென
நம்மை புறந்தள்வோரை
நாமே புறந்தள்ளி நிற்பது

*********