பெண்ணே நீ விழித்து எழு

சப்தங்கள் அற்ற நடுநிசியில்

ஒலிக்கும் கடிகார மூள் நகர்வாய்

ஊமையாகி இருக்கிறது

பெண் சுதந்திரம்

இறுகும் முடிச்சுகள்

அவளின் பேச்சு, எழுத்து

மட்டுமல்லாது

எண்ணங்களையும்

இறுக்குகிறது

நெறிக்கப்படும் குரல்வளையில்

பாலின பேதங்கள் மட்டுமே

வயது வித்தியாசங்கள்

இங்கே வியாபாரம்

விண்வெளிக்கு சுற்றுலாவென உயர்ந்துவிட்ட உலகில்

இன்றும்

அடுப்படியில் திறக்கமறுக்கும் சாரளங்களும் உண்டு

அதிகாரங்களும் வன்புணர்ச்சிகளும்

ஆண்மையின் அடையாளம்

என கருதி கொள்வதில்

மூண்டாசு கவி

நூற்றாண்டுகள் ஒரு பொருட்டு அல்ல

விருப்ப மணம் புரிவதிலும்

படி இறங்கி செல்வதிலும்

தாய்மை பெண்ணின் விருப்பம்

என தயங்காது எழுத்துரைப்பதிலும்

சுதந்திர வாஞ்சை

வரைந்திட்ட பெண் உயிர்த்தெழுகிறாள்

முதலில் அவளில் இருந்தே

தொடங்குகிறது

மூட்டி மோதி

பல தடைகளை மீறி

உருவாகும்

அவள்

சுவாசிக்கும் காற்றை சுகந்திரம் ஆக்க

பெண்ணே நீ விழித்து எழு

ஆயிரம் புகழ்ந்தாலும்

நீ அவர்களுக்கு

என்றோ ஒரு நாள் கும்பிடுபோடும்

சுமைதாங்கி கல் தான்.

அவர்கள் தேவை

உன் நிழல் மட்டுமே

படைப்பாளர் : அருணா ரவி

புகைப்படம் : பிராஸாந்தகர் தத்தா