பெண் சுதந்திரம்

அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல கண்டும்

மனதையும் கனவுகளையும் ஆளமுடியா

மீளாதுயரில் மரணமதை ஏற்கும் அவலநிலை…

குழந்தையையும் சீரழிக்கும் வன்கொடுமைகள்

தொடராத நாளே சுதந்திரநாள்

வானத்தையே ஆராயும் விந்தைகளை அறிந்தோம்

பள்ளியிலும் வன்கொடுமை புகுத்திய

மிருகங்களை என்செய்தோம்…

பட்டங்களும் பாதைகளும் இல்லத்தரசியாக மாற்றியதே

பெண் என்பதாலோ வீட்டுச் சிறையில் அடிமையாக்கியதே

பாதுகாப்பாகச் சென்றால் சுதந்திரமா

பத்திரமாக பதைபதைப்பின்றி பயணிப்பது சுதந்திரமா…

சுதந்திரமென்பது வார்த்தைகளோடே

வாழ்க்கையில் ஏது சுதந்திரம்…..

எழுதவோ பேசவோ செல்லவோ மகிழவோ

உரிமையுண்டா இவ்வுலகில்…

ஏன் சுவாசிக்கவே சுதந்திரமற்று போன அவலநிலை நாடறிந்ததே..

காற்றும் தண்ணீருமே வியாபாரமாகிய விசித்திர விந்தைகள்

இதில் பெண்களென்ன விதிவிலக்காவானும்

வசப்படும் அவளறிவிலே

எனினும் தினமும் வசைபாட்டே

வையமும் வியக்கும் விந்தைகள்

விதியென மூழ்கும் விடுகதை..

சுதந்திரமென்பது கனவாகவே இன்றும் எம்பெண்களுக்கு…

சாதனை பெண்களும் சாதாரணமாக சங்கடங்களோடே…

பள்ளிகூடங்களிலும் வன்கொடுமைகளின் ஆதிக்கமே..

சிறார்களுக்கே சுதந்திரமில்லை இச்சுதந்திர நாட்டினிலே….

இமயமே தலைகீழாகும் எம்பெண்களின்

இன்னலைகண்டால்..

இதயமற்ற மனிதனிடம் சிக்கி கருகிடும் அவலங்களே…

படைப்பாளர் : தினேஷ்