பெண் சுதந்திர பகல் கனவு

எழுபத்தைந்து ஆண்டுகள்

என்றுமே சுதந்திரம் தான்

வெறும் பெயரில் மட்டும்.

அடுப்பங்கரை தொடங்கி

ஆன்லைன் வரை

அன்றாடம் உலவும்

அவனியில் மங்கையர்.

அடுப்பங்கரை பெண்ணுக்கு

படிப்பெதற்கு என்று

அந்த கால ஆடவன்

சொன்னான்

குடும்பத்தை பேணும்

குத்துவிளக்கிற்கு

ஆன்லைன் விளக்கெதற்கு

என்றான் இந்தக் கால ஆடவன்.

வெறும் பிள்ளே பெற்றெடுக்கும்

எந்திரமாக கருதினான்

அன்றைய சான்றோன்.

பணியிலும் அவனது

காமத்திற்கு பலி கேட்கிறான்

இன்றைய சான்றோன்.

பேச்சு சுதந்திரம் பெண்ணுக்குண்டு

என்பார் பேச வாய் திறந்தால்

வாயாடி பிள்ளை என்று வசை பாடி

செல்வார் தோல் மேல் கை போட்டு

தோழமை கொள்ளுவார்

தோலை உரிக்கவும் தயங்க மாட்டார்.

எப்படி பார்த்தாலும் எழுபத்தைந்து

ஆண்டுகளானாலும் எழுநூறு

ஆண்டுகளானாலும் சுதந்திரம்

எனது பிறப்புரிமை என

பாடிக்கொண்டே பகல் கனவு

காணவேண்டும் சிறிது

கட்டுப்பாடுகளுடனும்

கண்ணீருடனும்.

படைப்பாளர் : கலந்தர் ஷேக்

புகைப்படம்: பிக்ஸல் ரோக்சானா ஷ்யுஸ்க்