
ஆண்மை
எப்படியெனினும் உன்னை வர்ணித்து கவிதை எழுதிடவே வேண்டும்..பலநாள் ஏக்கமாய்..பரிதவிக்கின்றன என் விரல்கள்..எதை சொல்லி உன்னை மயக்கிடுவேன்… கதை கதையாய்..என்னை வேறுலகம் கடத்திய அந்த மூதாட்டி ….வரமாய் வரும் தேவதையே..தாலாட்டும் பாடலை சொல்லி தர மறந்துவிட்டாள்…. வீட்டுபாடமெல்லாம் சரிபார்த்திட்ட என் குரு..குலமகளை போற்றிய என் மடலை பிழைத்திருத்தி தரவில்லை… அன்பில் அதிகாரம் செலுத்தி…என்னை வடித்திட்ட அன்னையோ..உன்னை குளிர்விக்கும் முறையே கற்றுக் கொடுக்கவில்லை…கள்ளத்தில் சிறுகுறும்பு புரிந்த தமக்கைஒருபோதும் கூறியதில்லை.. சண்டையில் உன்னை சமாதனப்படுத்தும் முறையே…ஏதும் விளங்காது..உன்னை வர்ணிக்க விழைக்கிறேன். கேள்…..பரமே…நான் உணர்ந்து உருகிபோனதெல்லாம்…உன்னை சீண்டிய ஆடவரைநீ நிமிர்ந்து தண்டிக்கும் போது தான்..என் உடன்பயணிக்கும் பெண்மையில்.நீ மட்டுமே.என்னை உணர்த்திட்ட ஆண்மை….. கங்குகள் தெறிக்கும் உன் விழியில்..பால்பேதங்கள்அர்த்தமற்று போனது..புதிதாய் ஓர் அண்டம் பெண்ணுருவாய் வந்தது…உன் நிழலாய். – அருணா ரவி