அடிமன வலி

June 30, 2021 ரகுராமன் 0

நேசித்த மனங்களைகாலம் பிரித்திட்டால்வலிகளுக்கேதுபாலின பேதம்? தோல்வியில்துவண்டுதுயரில்வாடிமீண்டுவிடும்வடிகால்ஆணுக்கேனோ…. தாடியும் பீடியும்தண்ணியும் கன்னியும்நட்பும் தனிமையுமென…. மாற்றுத் துணை பற்றிமெல்ல உயிர்த்தெழும்வரைசுற்றம் சகித்திடும்…. பெண்ணுக்கதுபெருஞ்சாபம்விட்டு விலகியதால்வீட்டுக்குத் தியாகிவிரும்பியவனுக்கு துரோகிகட்டியவனுக்கு பாவியெனும்சமூகக் கட்டுக்கு…. காவு கொடுத்திட்டவிருப்பங்கள் யாவும்நினைவுகளாய்அடிமனதை அறுக்கையில்பீறிட்டு அழுதிட…. தாழிட்ட கொதிகலன் தடதடத்தடங்கியதுபெண்ணுக்கானஒற்றைச் சமாதானக்கேடயம்சமயத்தில் கண்ணீர்!! – விஜி மணிகண்டன்

என்(ப்) பொழுது

June 30, 2021 ரகுராமன் 0

பூமியின் சுழற்சியில்நாளொன்றின்இருபத்திநான்கு மணிநேரங்களில்ஒரு சில நொடிகள் கூடவோகுறையவோ செய்யும். துளி துளியாய் சேர்த்த அந்தநொடிபொழுதுகளே நான்குவருடங்களில் ஒருமுழு நாளாக நிறைகிறது. கடிகார முட்களுக்குள்சிக்காதுரகசியமாக மறைந்திருக்கும்அந்த சில நொடிகளைசேமிக்கும்தீவிரத்தில் இருக்கிறேன். எப்பொழுது தேட?எங்கே தேட?காலையிலா ?ஆண்ட்ராய்டு யுகத்திலும்அறிவியல் வளர்ச்சியிலும்  என்றுமே இந்த அடுப்படியில்எடுக்கவேண்டிய அவதாரங்களில் மாற்றில்லை. முற்பகல் வேளையில்என்னுடைய பணிகளில் தலையை கொடுக்க,இந்த பாடத்தை முடிக்க உன் உதவி வேண்டும் என்கிறாள் மகள். வாட்டர் கலரை இப்பொழுதேதேடி தர வேண்டி நிற்கிறான் மகன்.அலைபேசியில் அம்மாவிடம்பேசவேண்டிய நேரத்தை இருவரும் மாறி மாறி மாற்றி மாற்றி கொண்டே இருக்கிறோம். இதற்கிடையில் அத்தை வந்து‘மதியம் நான் சமைத்துவிடுகிறேன்’என்பதே இப்போதுஎனக்குப் பிடித்த மூன்று வார்தைகளாகிவிட்டது. விமர்சனங்களை மட்டும்படித்துவிட்டு வாங்கி வைத்திருக்கும்புத்தகங்கள் எல்லாம் என்னை பார்என்னை பார் என்று அலமாரியிலிருந்து அம்பு விடுகின்றன. சில சிறுகதைகள் மனதிற்குள்ளேவடிவம் பெற்று மின்னி மறைந்துவிடுகின்றன. தட்டச்சு செய்யும் பொழுதுகளைதேடுவதே சுவாரஸ்யமான கதையாகிவிட்டது. பிடித்தமான முகநூல் பதிவுகளை எல்லாம்பிறிதொரு நாள் வாசிக்க சேமித்துவைத்து கடக்கிறேன்.என்னுடைய பொழுதுகளுடன்நான் பழகி வெகு காலமாகிவிட்டது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறைஆட்சியே மாறுகிறதேஇந்த வீட்டு நிர்வாகத்தைநீயும் கொஞ்ச நாள்பார்க்க கூடாதா என்றுநள்ளிரவு வரை பனி சுமையில்மூழ்கியிருக்கும் கணவரைபார்த்து மனசாட்சியில்லாமல்கேட்கமுடியவில்லை என் மனசாட்சியால். ஆமாம் “மனசாட்சியை எப்படி காணாமல்போக செய்வது?”ஏதேனும் வழி இருக்கிறதா? அமைதியாக எங்கோ எனக்காய்அமர்ந்திருக்கும்என்னுடைய பொழுதைஎப்போது தேட? காலையிலா?மதியம்? இரவில்?இல்லை….. அட நான்இன்னும் என்னுடைய பொழுதை  எங்கே தேடுவது என்று தான்தேடிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு பிரச்சனைகளுக்குமத்தியிலும் ஒருபூ பூக்க தானே செய்கிறதுஎன்ற பிரபஞ்சனின் வரிகள் ஒரு புன்னகையை தவழ விட்டுச் செல்கிறது. நாளையாவது எனக்கான பொழுதைகண்டுபிடிப்பேனா ?எத்தனையோ ‘நாளைக்கு’ சென்று விட்டது,ஆனாலும் நாளை மட்டும் மாறாமல்வந்து கொண்டிருக்கிறது. – இரா. நித்யா ஹரி

நாங்கள் பெண்கள் இல்லை…!

June 30, 2021 ரகுராமன் 0

கயல்விழிகள் இல்லைகார்குழலும் இல்லைகொழுசொலியும் இல்லைஇன்னார் மகள், மனைவி, தாய்இது இனி முகவரி இல்லை தாங்கும் அன்னைபூமி இல்லைஓடும் நதிமகளும் இல்லைபொழியும் வானத்தாயும் இல்லைஎது உங்கள் மேன்மை? எதுவும் இல்லை கொண்டாட வேண்டியவர்கள் இல்லைவணங்கத்தக்கவர்களும் இல்லைசாது பெண்களும் இல்லை சக உயிர்கள் ஆவோம்மகுடங்கள் வேண்டாம்மரியாதை போதும்.. – தி.சங்கீதா

அவள்

June 29, 2021 ரகுராமன் 0

அவள் அவளாகவே இருக்கட்டும்.அவளையேன் அந்தயிந்தவென  அர்த்தமற்ற உளறல்களால்  அலங்கரிப்பதேன்???அவள் அவளாகவே இருக்கட்டும். பார்வையிலே பலவற்றை உணர்த்துமிந்தபாவப்பட்ட சமூகத்தில் பழிச்சொல்லுக்கு பலியாவது அவளே.அவள் அவளாகவே இருக்கட்டும். அம்மா அன்னை அனைத்துமவளே – எனஆண்டாண்டாய் அலறுகிறீர் ஒரு நாளில்இதுவே இவளுக்கு போதுமென்ற நினைப்புடன்.அவள் அவளாகவே இருக்கட்டும் அவளாடைக்கும் அவளுணவிற்கும் அளவுகளுரைத்துஅன்பானவர்களே……. போதும்.அவள் அவளாகவே இருக்கட்டுமே!!! – அ.ஜெ. அமலா

பற

June 29, 2021 ரகுராமன் 0

வானமே எல்லைஎங்கும் பற சிறகு கொண்டுவானிற்கு வண்ணம் தீட்டு மனிதம் நேசிவையத்தின் மீது காதல்கொள் வீழும்போது சோர்ந்து போகாதேகூண்டுகளை உடை ரௌத்திரம் பழகுசுதந்திரத்தை சுவாசி கற்க மறவாதேகாகிதமும் ஆயுதம் ஆகலாம் வேட்டைக்கு பழகுசிறகை விரி பறவான் வசப்படும். – மணிகண்டன் முருகன்

ஆண்மை

June 29, 2021 ரகுராமன் 0

எப்படியெனினும் உன்னை வர்ணித்து கவிதை எழுதிடவே வேண்டும்..பலநாள் ஏக்கமாய்..பரிதவிக்கின்றன என் விரல்கள்..எதை சொல்லி உன்னை மயக்கிடுவேன்… கதை கதையாய்..என்னை வேறுலகம் கடத்திய அந்த மூதாட்டி ….வரமாய் வரும் தேவதையே..தாலாட்டும் பாடலை சொல்லி தர மறந்துவிட்டாள்…. வீட்டுபாடமெல்லாம் சரிபார்த்திட்ட என் குரு..குலமகளை போற்றிய என் மடலை பிழைத்திருத்தி தரவில்லை… அன்பில் அதிகாரம் செலுத்தி…என்னை வடித்திட்ட அன்னையோ..உன்னை குளிர்விக்கும் முறையே கற்றுக் கொடுக்கவில்லை…கள்ளத்தில் சிறுகுறும்பு புரிந்த தமக்கைஒருபோதும் கூறியதில்லை.. சண்டையில் உன்னை சமாதனப்படுத்தும் முறையே…ஏதும் விளங்காது..உன்னை வர்ணிக்க விழைக்கிறேன். கேள்…..பரமே…நான் உணர்ந்து உருகிபோனதெல்லாம்…உன்னை சீண்டிய ஆடவரைநீ நிமிர்ந்து தண்டிக்கும் போது தான்..என் உடன்பயணிக்கும் பெண்மையில்.நீ மட்டுமே.என்னை உணர்த்திட்ட ஆண்மை….. கங்குகள் தெறிக்கும் உன் விழியில்..பால்பேதங்கள்அர்த்தமற்று போனது..புதிதாய் ஓர் அண்டம் பெண்ணுருவாய் வந்தது…உன் நிழலாய். – அருணா ரவி